மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய மாமணி திருமலையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு சர்வோதய மண்டல் தலைவர் என்.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். புதுடெல்லி தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநர் அண்ணாமலை வரவேற்றார். உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கே.முரளி ஷங்கர் சிறப்புரையாற்றினார். பின்னர், திருமலை குறித்து தி.விப்ர நாராயணன் எழுதிய ‘மனதில் நிறைந்த மாமனிதர்’ மற்றும் கன்னாட் ராஜ் எழுதிய ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ ஆகிய நூல்களை வெளியிட்டார். தமிழ்நாடு சர்வோதய மண்டல் துணைத் தலைவர் ந.ராமலிங்கம், காந்தி நினைவு அருங்காட்சியகப் பொருளாளர் மா.செந்தில்குமார் ஆகியோர் முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
மூத்த காந்தியவாதி எம்.எம்.விசுவநாதன், தமிழ்நாடு சர்வோதய மண்டல் பொருளாளர் வீ.முருகன், உருமத்தான் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆ.ரவிச்சந்திரன், லி.ராஜா, ரசிகமணி டி.கே.சி.யின் கொள்ளுப்பேரன் ரகு, சென்னை காந்தி கல்வி மையத்தைச் சேர்ந்த பிரேமா, மோகன், குகானந்தம், பரோடா ரவி ஆகியோர் பேசினர்.
காந்தி அருங்காட்சியக உறுப்பினர் டாக்டர் கோபால், கல்வி அலுவலர் நடராஜன், நூலகர் ரவிச்சந்திரன், ஆராய்ச்சி உதவியாளர் தேவதாஸ், காந்தி நினைவு நிதிச் செயலாளர் ராஜேந்திரன், காந்திய சிந்தனைக் கல்லூரி முதல்வர் முத்துலட்சுமி, திருமலையின் மகள் சுபாஷிணி, சர்வோதய இலக்கியப் பண்ணை செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலாளர் நந்தா ராவ் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago