நாமக்கல் மாவட்டத்தில் திருடுபோன - ரூ.32 லட்சம் மதிப்புள்ள 160 செல்போன்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் திருடுபோன ரூ.32 லட்சம் மதிப்பிலான 160 செல்போன்களை தனிப்படை போலீஸார் மீட்டு உரியவர்களிடம் வழங்கினர்.

நாமக்கல் மாவட்டத்தில் திருடுபோன செல்போன்களை மீட்க எஸ்பி சரோஜ்குமார் டாகுர் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி ரூ. 32 லட்சம் மதிப்பிலான 160 செல்போன்களை மீட்டனர். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் எஸ்பி சரோஜ்குமார் டாகுர் வழங்கினார். கடந்த செப்டம்பர் மாதம் தனிப்படை போலீஸார் 301 செல்போன்களை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்கா பறிமுதல்

இதுபோல கொல்லிமலை, புதுச்சத்திரம் பகுதியில் உரிமம் இல்லாத 42 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்ட விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.58 லட்சம் மதிப்பிலான குட்கா ஆகியவற்றை நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்த திருச்சி உன்னியூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தமிழ்வாணன் (38), திருவண்ணாமலை தண்டாராம்பட்டைச் சேர்ந்த சுரேஷ் (38) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு லாரிகளை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்