நாமக்கல்: சத்துணவுத் திட்ட காலிப்பணியிடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்ட சத்துணவுத் திட்டத்தில் காலியாக இருந்த அமைப்பாளர் நிலையில் 166 பணியிடங்களும், சமையலர் நிலையில் 22 பணியிடங்கள் மற்றும் சமையல் உதவியாளர் நிலையில் 410 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கடந்த செப்டம்பர் 24 முதல் 30-ம் தேதி வரை பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக இப்பணி நியமனங்கள் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இப்பணி நியமனங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago