பெரியார் பல்கலை. விரிவாக்க மையம் சார்பில் இலவச பல் பரிசோதனை முகாம் :

By செய்திப்பிரிவு

தருமபுரி பெரியார் பல்கலைக் கழக முதுநிலை விரிவாக்க மைய நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இலவச பல் பரிசோதனை முகாம் நடந்தது.

தருமபுரியில் இயங்கும் பெரியார் பல்கலைக் கழக முதுநிலை விரிவாக்க மையமும், தனியார் பல் மருத்துவமனையும் இணைந்து தருமபுரியில் இலவச பல் பரிசோதனை முகாமை நடத்தினர். முகாமை, விரிவாக்க மைய இயக்குநர் முனைவர் மோகனசுந்தரம் தொடங்கி வைத்தார்.

முகாமில், விரிவாக்க மையத்தில் பயிலும் 420 மாணவ, மாணவியர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு இலவசமாக பல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தேவைக்கு ஏற்ப சிலருக்கு மருந்துகளும் வழங்கப்பட்டன.

முகாம் ஏற்பாடுகளை, விரிவாக்க மையத்தின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். முகாமில், மருத்துவர்கள் சவுந்தர், சர்மிளா, சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்