ரயில் மற்றும் பேருந்துகளில் பட்டாசு பெட்டிகளை எடுத்துச்செல்லக் கூடாது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை இன்று மக்கள் கொண்டாட உள்ளனர். தமிழக அரசு அறிவுறுத்தல் படி பொது மக்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வெடிக்க வேண்டும். சீன பட்டாசுகள், வெங்காய வெடி, பட்டாணி வெடி, சரவெடி போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது.
பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்கும் போது அப்பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட் கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி நண்பர்கள், உறவினர்களை பார்க்க பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் செல்லும் போது பட்டாசு பெட்டிகளை எடுத்துச்செல்ல அனுமதியில்லை.
வீட்டில் உள்ள சிறுவர்கள், பெரியவர்கள் முன்னிலையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும் போது இறுக்க மான ஆடைகளை அணிய வேண்டும். முடிந்த வரை பருத்தி ஆடைகளை உடுத்தினால் சிறந்தது. நீளமான ஊதுவத்தி களை கொண்டு பட்டாசுகளை வெடிக்கலாம். கம்பி மத்தாப்பு, சாட்டை, பென்சில் போன்றவற்றை உப யோகித்தபிறகு அருகே தண்ணீர் நிரம்பிய வாளியில் அதை போட்டு அனைக்க வேண்டும். பட்டாசுகள் பாதியில் எரிந்து அது அனைந்தால் அதை மீண்டும் பற்றவைக்க முயற்சி எடுக்க வேண்டாம். சிறுவர்கள், பட்டாசுகளை கையில் வைத்து கொளுத்தக்கூடாது. குழந்தைகள் வெடி வைக்கும்போது பெற்றோர் கூர்ந்து கவனிக்க வேண்டும். முடிந்த வரை அருகாமையில் இருக்க வேண்டும்.
குறிப்பாக, பட்டாசுகளை வைக்கும் போது சானிடைசர்கள் பயன்படுத்தக்கூடாது. அருகேயும் சானிடைசர்களை வைக்க வேண்டாம். மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோயில், அமைதியை விரும்பும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. வீட்டில் எளிதில் தீப்பற்றக்கூடிய காஸ் சிலிண்டர், அடுப்பு, மண் ணெண்ணெய் ஸ்டவ் ஆகிய இடங்களில் பட்டாசு பெட்டிகளை வைக்கக்கூடாது.
பட்டாசு வெடித்த பிறகு அதன் மூலம் சிதறும் காகிதங்களை ஒன்று சேர்த்து சிலர் அதை கொளுத்துவார்கள். அதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். காரணம் அந்த குப்பைக்கழவுகளில் கூட சில நேரங்களில் வெடிக்காத பட்டாசு இருந்தால் பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் பாதுகாப்பான வழிமுறைகளை பொதுமக்கள் கையாள வேண்டும். மாசில்லா, ஆபத்தில்லா தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago