திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ச.விசாகன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு ஆட்சியர் ச.விசாகன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 9,14,328 பேர், பெண் வாக்காளர்கள் 9,63,349 பேர், இதரர் 197 பேர் என மொத்தம் 18,77,874 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத 18 வயது நிரம்பியவர்கள், 31-12-2003 வரை பிறந்தவர்கள் பட்டியலில் இடம்பெற விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகளுக்காக நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago