கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு : இறந்தோருக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு

By செய்திப்பிரிவு

கிறிஸ்தவர்காளால் இன்று கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இறந்தவர்களுக்கு கல்லறைத் தோட்டங்களில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவ.2-ம் தேதியை இறந்தவர்களின் நினைவு நாளாகக் கடைபிடிக்கிறார்கள்.

இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்களின் குடும்பங்களில் மரித்த மூதாதையர்கள், பெற்றோர்கள், உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது கல்லறைகளையும் முன்னதாகவே சுத்தம் செய்து, வண்ணங்கள பூசி கல்லறைத் திருநாளன்று குடும்பத்துடன் சென்று அவற்றை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி இறைவேண்டல் செய்வார்கள்.

மேலும், அந்தந்த கல்லறைத் தோட்டங்களுக்கு உட்பட்ட ஆலயப் பாதிரியார்களால், இறந்தோரின் ஆன்ம இளைப்பாற சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கல்லறைகள் மீது புனித நீர் தெளிக்கப்படும். அன்றைய நாளில் அவரவர் இல்லங்களிலும் இறந்தவர்களின் படங்களை மலர்களால் அலங்கரித்து அஞ்சலி செலுத்துவதோடு ஏழைகளுக்கு உணவு அளித்தல் புத்தாடைகள் வழங்குவது போன்ற செயல்களின் மூலம் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். மதுரையில் தங்கள் பகுதிகளில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதையொட்டி தற்காலிக பூக்கடைகளும் அமைக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்