புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே அனுமதியின்றி மனநல காப்பகம் நடத்தியவர் மீது போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கந்தர்வக்கோட்டை அருகே அரியாணிப்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட ஆதரவற்ற மனநல காப்பகம், ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் அண்மையில் மூடி சீல் வைக்கப்பட்டதோடு, அங்கிருந்த 105 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, அனுமதியின்றி காப்பகம் நடத்தியதாக அரியாணிப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் வீரமணி மீது கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல, அறந்தாங்கி அருகே அழியாநிலை மற்றும் குரும்பூர் ஆகிய 2 இடங்களில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட தனியார் முதியோர் இல்லங்கள் 2 தினங்களுக்கு முன்பு ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் மூடி, சீல் வைக்கப்பட்டதோடு, அங்கு தங்கி இருந்த 127 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, அனுமதியின்றி இல்லம் நடத்தியதாக வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த எம்.சந்திரசேகரன் மீது 3 பிரிவுகளின் கீழ் அறந்தாங்கி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago