இந்திய நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டியும், சட்ட சேவை கொண்டாடும் விதமாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி, அக்.2-ம் தேதி முதல் நவ.14-ம் தேதி வரை சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பி.மதுசூதனன் தலைமையில் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
பேரணி, தஞசாவூர் பெரிய கோயில் முன்பு தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பி.சுதா செய்திருந்தார். பேரணி தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ரவளிப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago