பெரியாறு அணை குறித்து கேரளாவில் தவறான பிரச்சாரம்: : ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

By செய்திப்பிரிவு

பெரியாறு அணை தொடர்பான கேரளாவில் தவறான பிரச்சாரம் செய்யப்படுவதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக அரசின் சட்டப் போராட்டத்தால் உச்ச நீதிமன்றம் 142 அடியாக நீரை தேக்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது . தற்போது வரை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் கேரள அரசு இப்பகுதியில் அணை கட்டுவோம் என்றும், அணை நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்றும், உபரி நீரால் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தவறான கருத்துகள், வதந்திகளை திட்டமிட்டு பரப்புகின்றன.

மேலும் கேரள நடிகர்கள் பெரியாறு அணையை நீக்குவோம் என்று ட்விட்டரில் பதிவிடுவதோடு., 125 ஆண்டுகள் பழமையான அணை என்று பல வதந்திகள் கூறி உண்மைக்குப் புறம்பாக பேசி வருவது கடும் கண்டனத்துக்குரியது. பெரியாறு அணை விவகாரத்தில் கேரள நடிகர்கள், அரசியல்வாதிகள் தொடர்ந்து விஷமப் பிரச்சாரம் செய்து வருவார்களானால் இரு மாநில உறவுகள் கேள்விக்குறியாகும். எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் முதல்வர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்