மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் மீனாட்சியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருவேடகம் வைகை ஆற்றில் மீனாட்சி அம்மன் சிலை ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், கிராம உதவியாளர் ஆகியோர் ஆற்றுக்குச் சென்று சிலையை மீட்டனர். பீடத்துடன் கருங்கல்லாலான இச்சிலையின் உயரம் 3 அடி உள்ளது.
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் நவநீத கிருஷ்ணனிடம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ் சிலையை ஒப்படைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago