அரசு உத்தரவின்றி பெரியாறு அணை திறந்ததற்கு எதிர்ப்பு - குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு :

தமிழக அரசின் உத்தரவு இன்றி பெரியாறு அணையை கேரளா திறந்ததற்கு கண்டனம் தெரிவித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து தேனி மாவட்ட விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், சார் ஆட்சியர் செ.ஆ.ரிஷப், வேளாண் இணை இயக்குநர் தி.அழகுநாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்துக்கு ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலைமை வகித்து பேசியதாவது:

வேளாண் விரிவாக்க மையங் களில் நெல் 41.4 டன், கம்பு, சோளம் உள்ளிட்டவை 3.5 டன், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு ஆகியவை 13.8 டன், நிலக்கடலை 13.9 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் உரமும் போதிய அளவில் இருப்பு உள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

தமிழக அரசின் உத்தரவு இன்றி பெரியாறு அணையை கேரளா திறந்ததற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE