கிருஷ்ணகிரி, தருமபுரியில் நாளை (30-ம் தேதி) 1288 மையங்களில் 7-ம் கட்டமாக மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7-வது கட்டமாக நாளை (30-ம் தேதி) 800 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் இவ்வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், கரோனா நோய் அறிகுறி ஏற்பட்டாலும் அவசர சிகிச்சை தேவைப்படாமலும், ஆக்ஸிஜன் தேவை ஏற்படாமலும் இருக்கும். எனவே, பொதுமக்கள் முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் 2-ம் கட்டமாக கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளாதவர்கள் நாளை தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் இன்று (29-ம் தேதி) 378 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.இதே போல் நாளை (30-ம் தேதி) 488 இடங்களில் 7-ம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில், விடுப்பட்டவர்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசியும், ஏற்கெனவே முதல்கட்ட தடுப்பூசி செலுத்தியவர்கள், 2-ம் கட்டமாக கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம். கரோனா விதிமுறைகளை பின்பற்றி, 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டமாக தருமபுரியை உருவாக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago