ரசாயன உரம் பயன்பாடுகளை குறைக்கும் வழிகள் : விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

ரசாயன உரம் பயன்பாடுகளை குறைக் கும் வழிகள் குறித்து விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் ரமணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தது:

நடப்பு சம்பா பருவத்தில் 73 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு, செப்டம்பர் மாதம் முடிய சுமார் 24 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சி யுள்ள நடவுப் பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் சாகுபடிக்கு கொண்டு வரப்படும்.

சம்பா பருவத்திற்கு தேவையான மத்திய மற்றும் குறுகிய கால நெல் ரகங்களான ஏடீடீ 39,திருச்சி-3,என,எல்,ஆர்,34449,ஏடிடி,3,கோ,51 ரகங்கள் 250 மெட்ரிக் டன் அளவிற்கு வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் நெல் விதைகள் 200 மெட்ரிக் டன் அளவிற்கு விதை சுத்திகரிப்பு நிலை யத்தில் இருப்பு வைக்கப்பட்டு சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரபி பருவத்திற்கு தேவையான உளுந்து விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்க ளிலும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு தேவையான ரசாயன உரங்கள் யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் போது மான அளவு இருப்பு உள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து மண்ணில் பயிருக்கு கிடைக்காத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் அதிகளவில் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, கேஎம்பி பொட்டாஷ் போன்ற உயிர் உரங் களை வாங்கி பயன்படுத்த வேண் டும். உயிர் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது,

இந்த உயிர் உரங்களை நன்கு மக்கிய தூள் செய்த குப்பை எருவு டன் கலந்து இடுவதால் பயிருக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்கள் எளிதில் கிடைக்கும்.

விழுப்புரம் மாவட்டத்தில் போது மான அளவு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்கள் விவசாய நிலங்களில் இருப்பதால் விவசாயிகள் ஏக்கருக்கு 1 மூட்டை என்ற அளவில் டிஏபி உரம் இடுவதை தவிர்த்து அரை மூட்டை என்ற அளவில் இட வேண்டும்.

இதனால் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை உரச்செலவு மிச்சமாகும், மேலும் யூரியா உரத் தேவையினை குறைப்பதற்காக திரவ வடிவில் உரக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் நானோ யூரியாவினை 1 லிட்டர் நீருக்கு 4மிலி என்ற அளவில் கலந்து மேலுரம் இடலாம்.

நடவு செய்த 20 முதல் 25 மற்றும் 50 முதல் 55 நாட்களுக்குள்ளும் இருமுறை இதனை தெளிப்பான் மூலம் நெற் பயிரின் மீது தெளித்து பயன்பெறலாம் என்று தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்