காரைக்குடியில் சாலையில் கிடந்த பணம் போலீஸாரிடம் ஒப்படைத்த மாணவர்கள் :

By செய்திப்பிரிவு

காரைக்குடியில் சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த மாணவர்களை காவல் துறையினர் பாராட்டினர்.

திருப்பத்தூர் அருகே கீழச்சீவல்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விக்னேஷ், அஜீத்குமார். இருவரும் நேற்று தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்க காரைக்குடி வந்துள்ளனர். ஐந்து விளக்கு அருகேயுள்ள துணிக்கடைக்குச் சென்றபோது சாலையில் 100 தாள்களை கொண்ட 50 ரூபாய் கட்டு (மொத்தம் ரூ.5,000) கிடந்துள்ளது. அதை எடுத்த இருவரும் காரைக்குடி வடக்கு இன்ஸ்பெக்டர் ராஜகுமாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை பாராட்டிய இன்ஸ்பெக்டர் ராஜகுமார், இருவருக்கும் பேனா பரிசளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்