திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியின் தொழில்முனை வோர் கழகம், சுற்றுச்சூழல் கழகம், சுற்றுப்புறச்சூழல் சீராக்குதல் கழகம் ஆகியவை சார்பில் மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா நடைபெற்றது.
பொருளியல் துறை பேராசி ரியர் ரவிச்சந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வத்தலகுண்டு அருகே தேவரப்பன்பட்டியில் இயங்கிவரும் லீப் பைபர் தொழிற் சாலையை பார்வையிட்டனர். சிறுதொழில்கள் தொடங்குவது குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சமூக பொறுப்புடன் பொருட்களை தயாரிப்பது குறித்தும் மாணவர் களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பாக்குமட்டை தட்டுகள், குறித்து லீப் பைபர் தொழிற்சாலையின் இயக்குநர் அருண்பிரசாத் மாணவர்களுக்கு விளக்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago