நிலக்கோட்டை அருகே எத்திலோடு கண்மாய்க்கு - 10 ஆண்டுகளுக்கு பிறகு வந்த தண்ணீரை வரவேற்ற விவசாயிகள் :

நிலக்கோட்டை அருகே உள்ள எத்திலோடு கண்மாய்க்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

நிலக்கோட்டை ஒன்றியத்தில் எத்திலோடு கண்மாய்க்கு கடந்த 10 ஆண்டுகளாக வரத்து வாய்க்காலில் இருந்து தண்ணீர் வரவில்லை. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில், திமுகவினர் எத்திலோடு மற்றும் ஆவாரம்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். தற்போது மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரை எத்திலோடு உள்ளிட்ட கண்மாய்க ளுக்கு கொண்டு செல்லும் பணியில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக பிள்ளையார்நத்தம் கண்மாய் மறுகால் பாய்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு எத்திலோடு கண்மாய் நோக்கி தண்ணீர் சென்றது. இதனை வரவேற்கும் விதமாக நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஒன்றிய கவுன்சி லர்கள் அறிவு, ரோஸ்நெடுமாறன், தியாகு மற்றும் விவசாயிகள் சிறப்பு பூஜை செய்து மலர் தூவி வரவேற்றனர்.

மேலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்