திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தின் சார்பில், விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.எஸ்.பாலு தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் செ.முகுந்தன் வரவேற்றார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நிலைய அலுவலர் கே.காளிதாஸ் பங்கேற்று, பட்டாசு வெடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
முன்னணி தீயணைப்பாளர்கள் உதவியுடன் எரிவாயு கசிவு, மின்கசிவு, எண்ணெய் பொருட்கள் தீப்பிடித்தல், வெடிவிபத்து போன்றவற்றை தவிர்ப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில், பட்டதாரி ஆசிரியர் பா.ரகு நன்றி கூறினார். நிகழ்ச்சியை பட்டதாரி ஆசிரியர் வி.வடிவேல் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் என்.நேதாஜி செய்திருந்தார். விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மாணவ, மாணவிகளிடம் விநியோகம் செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago