திருவாரூர் மாவட்டத்தில், நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் பொது இடங்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன.
இதன் காரணமாக, பொது இடங்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து, ஓரிடத்தில் அடைத்து வைக்க நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி நிர்வாகங்களுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த கால்நடைகளை உரிய அபராதம் செலுத்தியபிறகே உரிமையாளர்கள் மீட்டுச் செல்ல இயலும். எனவே, பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை பொது இடங்களிலும், சாலைகளிலும் நடமாடவிடாமல், தங்கள் குடியிருப்புப்பகுதியிலேயே அடைத்து வைக்க வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள் என ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago