தமிழக அரசு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சிறப்பு சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாநகரச் செயலாளர் தேவா தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழக மாநகரச் செயலாளர் ராவணன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் எம்.பி.நாத்திகன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சிறப்பு சட்ட கோப்பு தமிழக ஆளுநரின் பரிந்துரைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 7 தமிழர் விடுதலை குறித்து இதுவரை பதில் ஏதும் இல்லை. குடியரசுத் தலைவர் தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்டம், ஈழத்தமிழர் விடுதலை ஆகியவற்றில் பாராமுகமாய் இருப்பது தமிழக மக்களை உதாசீனம் செய்வதாகவே உள்ளது. எனவே, குடியரசுத் தலைவர், மத்திய அரசு கடைபிடித்து வரும், தமிழக அரசு மீதான விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago