திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான மனு நீதி நாள் முகாம்கள் 2 கட்டமாக நடத்தப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் முன்கூட்டியே தங்களது மனுக் களை சம்பந்தப்பட்ட துறை அதி காரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.
மனு நீதிநாள் நடைபெறும் இடங்கள் மற்றும் அதன் விவரம் வருமாறு:
திருப்பத்தூர் வட்டம் தாத வள்ளி கிராமத்தில் நவம்பர் 24-ம் தேதி (புதன்கிழமை) மனு நீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெறும். வாணியம்பாடி வட்டம் நாய்க் கனூர் கிராமத்தில் நவம்பர் 17-ம் தேதி (புதன்கிழமை) மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெறும்.
நாட்றாம்பள்ளி வட்டம் கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் நவம்பர் 17-ம் தேதி திருப்பத்தூர் சார் ஆட்சியர் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெறும். ஆம்பூர் வட்டம் விண்ணமங்கலம் கிராமத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலை மையில் மனு நீதி நாள் முகாம் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் 2-ம் கட்ட முகாம் நடை பெறுகிறது. அதன்படி, ஆம்பூர் வட்டம் அரங்கல்துருகம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் டிசம்பர் 22-ம் தேதி மனு நீதி நாள் முகாம் நடைபெறும். நாட்றாம்பள்ளி வட்டம் பணியாண்டப்பள்ளி கிராமத் தில் டிசம்பர் 15-ம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், திருப்பத்தூர் வட்டம் லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் டிசம்பர் 15-ம் தேதி திருப்பத்தூர் சார் ஆட்சியர் தலைமையிலும், வாணியம்பாடி வட்டம் வெலதிகாமணிபெண்டா பகுதியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் முகாம் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago