அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் - தொலைதூர கல்வி முறையில் பயில வரும் 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு :

By செய்திப்பிரிவு

அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியின் சர்வதேச வணிக துறை தலைவர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இக்கல்லூரியில் இயங்கும் தொலைதூர கல்வி மையத்தில் 32 இளங்கலை, 31 முதுகலை, 15 பட்டயம், 12 சான்றிதழ் மற்றும் 10 குறுகிய கால படிப்புகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (எண்- 333005) கற்போர் மையமாக தேர்வு செய்தல் அவசியம். மேலும் பாடப்புத்தகங்கள், அடையாள அட்டை அஞ்சல் மூலமாக வீட்டுக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கல்லுாரி முதல்வர் (பொ)ஹேமலதா கூறும்போது, “விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஓர் அடையாள அட்டை, ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் போட்டோ, கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்று, உரிய மின்னஞ்சல் முகவரியுடன் விண்ணப்பிக்க வேண்டும். இணையவழியில் சேர்க்கை கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது. இல்லையெனில் ‘தமிழ்நாடு ஒப்பன் யுனிவர்சிட்டி’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலையைக் கொண்டும் செலுத்தலாம் அல்லது கற்றல் மையம் மூலமாக நேரடியாகவும் செலுத்தலாம். வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99441-51592 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்