கடலூர் திருப்பாதிரிபுலியூரில் ரயில் நிலை யம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி காலை 8 மணியனவில் பெனாரஸில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரமேஸ்வரத்துக்கு புறப்பட்டது. இந்த ரயில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வது வழக்கம். ஆனால் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் ரயில் நிலையத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வரவில்லை.
சந்தேகம் அடைந்த ரயில் நிலைய அதிகாரி அந்த எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது ரயில் டிரைவர் சிக்னல் கிடைக்கவில்லை என்றும் அதனால் கடலூர் கம்மியம்பேட்டை அருகே ரயிலை நிறுத்தி வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
உடனே திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலைய அதிகாரிகள் கம்மியம்பேட்டை ரயில்வேகேட்டுக்கு சென்று பார்த்து போது ரயில்வே கேட்டை மூடுவதற்காக பயன்படுத்தும் சக்கரத்தில் துணி சிக்கி, ரயில்வே கேட் சரியாக மூடாமல் இருந்ததால் சிக்னல் கிடைக்கவில்லை என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் துணியை அகற்றி ரயில்வே கேட்டை மூடினர். அதன் பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்துக்கு சென்றது. சிக்னல் கோளாறால் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
கேட்டை மூடுவதற்காக பயன்படுத்தும் சக்கரத்தில் துணி சிக்கியிருந்ததால் சிக்னல் கிடைக்கவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago