விழுப்புரம் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஏராளமான பனைமரங்கள் வெட்டிவீழ்த்தப்ப டுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடி செலவில் நான்குவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. விழுப்புரம், கோலியனூர், வளவனூர், கெங்கராம்பாளையம், கண்டமங்கலம், கடலூர், ஆலப்பாக்கம், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரை 194 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் முதற்கட்டமாக சாலையின் இருபுறத்தி லும் 22.5 மீட்டர் என 45 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இப்பணிகளுக்காக விழுப்புரம், கோலியனூர், வளவனூர், கெங்கராம்பாளையம், கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலையோரம் வானுயர்ந்து காணப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் அடையாள சின்னமாக கருதப்படும் பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதைக் கண்டு சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஒருபுறம் பனை மரங்களை பாதுகாக்க பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும் பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும் அரசு அறிவித்துள்ளது. ஆனால் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுவருகிறது.
எனவே, பனை மரங்கள் வெட்டப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பனை மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்கப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள வழிவகை செய்திட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago