கடலூர் மாவட்டம் சேத்தியா த்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட் டது கிளாங்காடு கிராமம். இங்கு நானூறு குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றன. இவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி இல்லாததால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். வரையறுக்கப்பட்ட இரண்டாவது வார்டில் இருந்த மினி வாட்டர் டேங்க் பழுதாகி உள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ளகுடியிருப்பு வாசிகள் கடந்த ஒருமாதத்திற்கு மேலாக புதிதாக குடிநீர் இன்றி தவித்து வருகின் றனர். இப்பகுதி பெண்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த மினி வாட்டர் டேங்க் மோட்டாரை சரி செய்து தடையற்ற குடிநீர் அனை வருக்கும் வழங்க வேண்டும் என பலமுறை இப்பகுதி மக்கள்சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை.
கடலூர் மாவட்ட நிர்வாகம் மினி வாட்டர் டேங்கை சீர மைத்து இப்பகுதியில் உள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என்ற எதிர்பார்பில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை செடியையும் அகற்ற வேண்டும்; கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அப்பகுதி மக்கள் வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago