தஞ்சாவூர் அருகே திருமணமாகாத இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது 2-வது மகள் கனகவள்ளி(33). திரு மணமாகாத இவர், நாள்தோறும் காலையில் ஆடுகளை மேய்ச் சலுக்கு அழைத்துச் சென்று, ஆடுகளுடன் மாலையில் வீடு திரும்புவார்.
கனகவள்ளி நேற்று முன் தினம் காலை ஆடுகளை மேய்ச் சலுக்காக அழைத்து சென்றுள் ளார். மாலை ஆடுகள் மட்டும் வீடு திரும்பிய நிலையில், இரவாகியும் கனகவள்ளி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வழக்கமாக அவர் ஆடு மேய்க்கச் செல்லும் இடங்களில் தேடி உள்ளனர்.
இந்நிலையில், அதே கிராமத் தில் அடர்ந்த வனப்பகுதியில் உடல் முழுவதும் காயங்களுடன் கனகவள்ளி கொலை செய்யப் பட்டு கிடந்துள்ளார்.
தகவலறிந்து சென்ற அம்மா பேட்டை போலீஸார், கனகவள்ளி யின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது கிடைத்த மீன்பிடிக்கும் தூண்டில் கம்பை கண்டெடுத்தனர். இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தி, அதே கிராமத்தைச் சேர்ந்த பெரிய சாமி(28), சதீஷ்(25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “வடவாறு கரையில் அமர்ந்து மீன்பிடித்துக்கொண் டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, ஆடு மேய்த் துக்கொண்டு கனகவள்ளி மட்டும் தனியாக இருந்ததை அறிந்து, அவரை அடர்ந்த வனப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைப் பார்த்த சதீஷும் கனகவள்ளியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளனர்” என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago