திருவாரூரில் இடிந்து விழுந்த கமலாலய குளத்தின் சுற்றுச் சுவர் உடனடியாக சீரமைக்கப்படும் என மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரண மாக பெய்த தொடர் மழையால் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் கமலாலய குளத்தின் தென்கரையில் உள்ள சுற்றுச் சுவர் 101 அடி நீளத்துக்கு நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதை மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் ஜெ.குமரகுருபரன், திருவாரூர் ஆட்சி யர் ப.காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன், எஸ்.பி சி.விஜயகுமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியது: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் உள்ள கமலாலய குளத்தின் தென்கரை சுற்றுச் சுவர் 101 அடி நீளத்துக்கு பருவமழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து அறிந் தவுடன் முதல்வர், இந்துசமய அறநிலையத் துறையினர், திரு வாரூர் ஆட்சியர் ஆகியோரிடம் தொடர்புகொண்டு, இடிந்து விழுந்த தெப்பக் குளத்தின் சுற்றுச் சுவரை ஆய்வு செய்து உடன டியாக சீரமைக்கவும், நீராட வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கமலாலய குளத்தில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவரை உடனடியாக சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், இந்த தெப்பக் குளத்தின் 4 கரைகளிலும் உள்ள சுற்றுச் சுவரின் ஸ்திரத் தன்மையை வல்லுநர்கள் மூலம் ஆராய்ந்து, பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அந்த பகுதியையும் சீரமைக்க உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில், நிரந்த தீர்வு காண முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், கோட்டாட்சியர் பாலசந்திரன், கோயில் செயல் அலுவலர் கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago