அதிமுக இடத்தை கபளீகரம் செய்ய பாஜக திட்டம் : பீட்டர் அல்போன்ஸ் கருத்து

By செய்திப்பிரிவு

அதிமுக பலவீனமாகி வருவ தால், அதன் இடத்தை கபளீகரம் செய்து தமிழகத்தில் தன்னை எதிர்க்கட்சியாக நிலை நிறுத்திக் கொள்ள பாஜக நினைக்கிறது என தமிழ்நாடு சிறுபான்மை நல வாரியத் தலைவரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர் வாகியுமான பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக பலவீனமாகி வருவதால், அந்த இடத்தை பாஜக கபளீ கரம் செய்து, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நினைக்கிறது. அதில் ஒரு கட்டமாக இந்த ஆட்சி யின் மீது பொய்யான குற்றச் சாட்டுகளைச் சுமத்தி, ஆட்சி நிர் வாகம் மற்றும் மக்களின் கவனத் தைத் திசை திருப்பி வருகிறது.

மாநில அரசின் அனைத்து துறைகள் பற்றிய தகவல்களை, சம்பந்தப்பட்ட துறைச் செயலா ளர்கள் தன்னிடம் வந்து விளக்க வேண்டும் என தமிழக ஆளுநர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. அரசாங்கத்தின் கவ னத்தை திசை திருப்புவதாகவோ, மக்களுடைய முனைப்பை சீர்கு லைப்பதாகவோ ஆளுநரின் நடவ டிக்கைகள் இருந்து விடக்கூடாது என்பதுதான் எங்கள் ஆசை.

அரசியல் சாசனத்தின்படி, ஆளுநருக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறதோ, அதை மதிக்க முதல்வர் ஸ்டாலின் தயாராக இருப்பார். அதே நேரத்தில், ஆளுநரின் அதிகாரம் வரம்பு மீறினால், அதை எதிர்க்கவும் ஸ்டாலின் பயப்பட மாட்டார்.

பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் ஒரு அரசியல் கட்சி யின் தலைவர்போல நடந்து கொள்ளவில்லை. கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத் தாமல், கடினமான வார்த்தை களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது, அவருக்கும் நல்லது, ஜனநாயகத்துக்கும் நல்லது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்