திருப்பத்தூர் மாவட்டத்தில் - தீபாவளி பட்டாசு விற்பனையை : தொடங்கி வைத்த ஆட்சியர் :

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருப்பத்தூர் கற்பகம் கூட்டுறவு பண்டகசாலையில் பட்டாசு முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு சங்கம் சார்பில் கற்பகம் கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்காக தனி அங்காடி திறக்கப்பட்டுள்ளது. இங்கு, உதிரி பட்டாசுகள், கிப்ட் பாக்ஸ், சர வெடிகள், மத்தாப்புகள், பூத்தொட்டி, சங்கு சக்கரம் உள்ளிட்ட பல ரகங்களில் பட்டாசுகள் விற் பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

பட்டாசு உற்பத்தியில் பிரிசித்திப்பெற்ற நிறுவனங்களின் பட்டாசு ரகங்கள் குறைந்த விலையில் கூட்டுறவு விற்பனை அங்காடியில் கிடைக்கும். திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக்கல்லூரி எதிரேயுள்ள கற்பகம் பண்டக சாலை கடையிலும், திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள 2 கற்பகம் பண்டகசாலை கடையிலும், வாணியம்பாடி பூக்கடை பஜார் பேங்க்ரேவ் பகுதியில் ஒரு பட்டாசு விற்பனை அங்காடி என 3 கற்கபம் கூட்டுறவு பண்டகசாலை பட்டாசு கடைகளில் இன்று (நேற்று) முதல் தீபாவளி பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களுக்கு தேவையான பட்டாசு ரகங்களை கற்பகம் கூட்டுறவு அங்காடியில் வாங்கி கூட்டுறவு சங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், கற்பகம் கூட்டுறவு பண்டகசாலை இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ரேணுகாம்பாள், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் முனிராஜ், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், கூட்டுறவு பண்டக சாலை மேலாளர் ஞானவேல், மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்