இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இடைநிலைக்குழு செயலாளர்கள் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கோட்டூர் ஒன்றியச் செயலாளர் எம்.செந்தில் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களான எம்.பி எம்.செல்வராஜ், வை.செல்வராஜ் மற்றும் எம்எல்ஏ க.மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ கே.உலகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மத்திய அரசின் கலால், சுங்க வரி விதிப்பு முறைகளே பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். தமிழக அரசு தனது வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ள போதிலும், எண்ணெய் நிறுவனங்கள் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால், அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்.30-ம் தேதி மாவட்டம் முழுவதும் சைக்கிளில் பேரணியாக சென்று போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago