பள்ளிக் குழந்தைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் முழு பாதுகாவலராக இருக்க வேண்டும்: ஆட்சியர் :

மயிலாடுதுறை ஏவிசி கலைக் கல்லூரியில், பள்ளி வாகன கூட்டாய்வு சிறப்பு முகாம் ஆட்சியர் ரா.லலிதா தலைமையில் நேற்று நடைபெற்றது. முகாமில், பள்ளி வாகனங்கள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்த ஆட்சியர், தீயணைப்புத் துறை சார்பில் நடைபெற்ற வாகன தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகையையும் பார்வையிட்டார். பின்னர், அவர் பேசியது:

பள்ளி வாகன ஓட்டுநர்கள், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப் பில் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையையும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வரும்போதும், திரும்ப வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போதும், குழந்தைகளுக்கு முழு பாதுகா வலராக ஓட்டுநர்கள் இருக்க வேண்டும். வாகனங்களில் ஏற்படும் சிறுசிறு கோளாறுகளை உடனுக்குடன் சரிசெய்து, வாகனங்களை நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்துக் குட்பட்ட 73 பள்ளிகளைச் சேர்ந்த 460 வாகனங்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள் ளது. கரோனா காலத்துக்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளி வாகனங்கள் சரியான முறையில் இயங்குகின்றனவா என ஒவ்வொரு ஓட்டுநரும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், வட்டார போக்கு வரத்து அலுவலர் ப.நாகராஜன், கோட்டாட்சியர் பாலாஜி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வி.ராம்குமார், விஸ்வநாதன், மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்