காவல் துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி :

By செய்திப்பிரிவு

நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு, பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாகை மாவட்ட காவல் துறையின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நாகை அவுரித்திடலில் நேற்று நடைபெற்றது. போட்டியை எஸ்.பி கு.ஜவகர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் போலீஸார் கலந்துகொண்டனர். நாகை அவுரித்திடலில் தொடங்கி ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனை வருக்கும் எஸ்.பி கு.ஜவஹர் சான்றிதழ் வழங்கி உற்சாகப் படுத்தினார்.

இதேபோல, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காவல் துறை சார்பில் நேற்று நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம் தொடங்கி வைத்தார்.

இந்த மினி மாரத்தான் போட்டி திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி, வேலூர் பாலம் வரை சென்று, மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பயிற்சி டிஎஸ்பி பார்த்திபன், கோட்டூர் இன்ஸ்பெக்டர் சிவக் குமார், போக்குவரத்து இன்ஸ் பெக்டர் இளம் கிள்ளிவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்