இந்தியாவில் வங்கிகளின் வாராக் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது என அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கணேசன் தெரிவித்தார்.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழுவின் 9-வது மாநாடு தஞ்சாவூரில் நேற்று நடை பெற்றது. மாநாட்டுக்கு, தலைவர் ராமபத்திரன் தலைமை வகித்தார்.
மாநில பொதுச் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கும்பகோணம் மண்டலச் செய லாளர் ஜெயநிவாஸ் வரவேற் றார். சங்கத்தின் தேசியக்குழு பொதுச் செயலாளர் நாகராஜன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வங்கி அதிகாரிகள், மேலாளர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக, துணை பொதுச் செயலாளர் ஜவகர் நன்றி கூறினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாநில பொதுச் செயலாளர் கணேசன் செய்தியாளர்களிடம் கூறியது:
பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகையை திரட்டுவ தில் பொதுத்துறை வங்கிகள் முக் கிய பங்கு வகித்து வருகின்றன. இந்தியாவில் உள்ள வங்கிகளில் விவசாயிகள், பொதுமக்களின் வைப்பீடு ரூ.101 லட்சம் கோடி உள்ளது. அதேநேரம், வங்கிகளின் வாராக்கடன் மட்டும் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. தொழில் துறையின் வாராக்கடன்கள் அதிகரித்து வருவதால், பொதுத் துறை வங்கிகளின் வளர்ச்சி நசுக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு கடன்களை திருப்பிச் செலுத்துவதில் இருந்து தப்பிக்க, கடன் வாங்குபவர் களுக்கு அரசு வசதி செய்யும் முறையை எதிர்க்கிறோம். இந்த கடன்களை வாங்கியவர்கள் பொதுமக்களோ, விவசாயிகளோ கிடையாது. கார்ப்பரேட் முதலா ளிகள். அவர்கள் வாங்கிய கடனை வாராக்கடனாக அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்?
பொதுத்துறை வங்கிகளை இணைப்பதால், வாடிக்கையாளர் களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக, இது ஊழியர்களை வெளியேற்றும் செயலாகத்தான் பார்க்கப்படு கிறது. எனவே, பொதுச் சொத்தை பாதுகாக்க வேண்டும். வங்கிகளை தனியார் வசம் ஒப் படைக்கக் கூடாது என்றார்.
இந்தியாவில் உள்ள வங்கிகளில் பொதுமக்களின் வைப்பீடு ரூ.101 லட்சம் கோடி உள்ளது
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago