அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பேராசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஐக்யூஏசி நடத்திய ஒரு நாள் பேராசிரியர் திறன் மேம்பாடு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் முனைவர் ச.செபாஸ்டின் பெரியண்ணன் தலைமை வகித்துப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் பி.பிலோமிநாதன் வரவேற்றார். கல்லூரி நிர்வாகி முனைவர் ச.ஆரோக்கியதாஸ் வாழ்த்துரை வழங்கினார். ஐக்யூஏசியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.நபிஸ் சுல்தானா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர் முனைவர் அ.வனிதா, ‘தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகளை எவ்வாறு ஆய்வுகளில் பயன்படுத்துவது’ என்ற தலைப்பில் ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் பேசினார். இந்நிகழ்வில், 10 கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர் . முனைவர் ஜே.மரியஜான்சி நன்றி கூறினார். l

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்