சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் பள்ளியில் - மாணவர்கள், ஆசிரியர்களுக்கு காவல் துறையினர் விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர் ஒருவரை ஆசிரியர் வகுப்பறையில் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. டிஎஸ்பி அசோகன், உதவி ஆய்வாளர்கள் லூயிஸ்ராஜ், பரமேஸ்வரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், ஷேக்நாஸர், முதல் நிலை காவலர் தீபா கிறிஸ்டின் ஆகியோர் கொண்ட குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தனித்தனியாக பேசினர்.பள்ளியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். தற்போது உள்ளசட்டமுறைகள் குறித்து விளக்கினர். பள்ளிக்குள் மாணவர்கள் செல் போன் எடுத்து வருவதை தடுக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் பல இடங்களில் விழிப்புணர்வு பேனர் வைக்க வேண்டும்.

மாணவர்களின் பெற்றோர் களை மாதம் ஒருமுறை பள்ளிக்கு அழைத்து மாணவர்களின் நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூற வேண் டும். மாணவர்களிடம் ஆசிரியர்கள் உளவியல் ரீதியாக அவர்களின் குறைகளை எடுத்துக்கூறி திருத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குகநாதன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்