மரக்காணம் ஒன்றியத்தில் 26 ஒன்றியக் குழு உறுப்பினர் களுக்கான தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் 17 , கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, அதிமுக 3, பாமக 2, சுயேச்சை 3 என ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மரக்காணம் ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக, மரக்காணம் கிழக்கு ஒன்றியசெயலாளர் தயாளனை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. ஆனால் தயாளனை எதிர்த்து மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கண்ணன் என்பவரும் இப் பதவிக்கு போட்டியில் இறங்கினார்.
ஒன்றியக் குழு தலைவர் பதவியை பிடிப்பதில் தயாளன், கண்ணன் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இதன் கார ணமாக இருவரும் தங்களுக்கு ஆதரவாக உறுப்பினர்களை வெளியூருக்கு அழைத்துச் சென்று தங்க ளது பாதுகாப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று ஒன்றிய குழுத் தலைவர் , துணைத்தலைவர் தேர்வு செய்ய வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக விழுப்புரம் மாவட்ட ஏடிஎஸ்பி கோவிந்தராஜ் தலை மையில் அதிரடிப்படை போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர் மஸ்தான்தலைமையில் தயாளன் ஆதரவா ளர்கள் வாக்கெடுப்பு நடைபெற இருந்த இடத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடம்கழித்து கண்ணனின் ஆதரவா ளர்கள் புதுவை பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட கார்களில் ஒன்றாக வாக்கெடுப்பு நடக்கும் பகுதியை நோக்கி வந்தனர்.
இவர்களைப்பார்த்த தயாளன் ஆதரவாளர்கள் சுமார் 100- க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். சாலையில் கட்டைகளை போட்டு வாக்கெடுப்பு நடைபெறும் மையத்திற்கு வரவிடாமல் கண்ணனின் ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தினர். இதனை கண்ட போலீஸார் இருகோஷ்டி களையும் மோதிக்கொள் ளாமல் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக இரு கோஷ்டி களும் அதே இடத்தில் நின்று கொண்டு ஆவேச வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர். ஒரு கட்டத்தில் நிலைமை மோசமானதால் வேறுவழியில்லாமல் மறுதேதி அறிவிக்காமல் இந்த தேர்வை தள்ளி வைப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவிப்பு செய்தனர்.அதற்கான அறிவிப்பு நோட்டிசை யும் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஒட்டினர்.
இதனைத்தொடர்ந்து கண்ண னின் ஆதரவாளர்கள் அங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். முறையாக தேர்தல் நடத்தி இருந்தால் நாங்கள்தான் வெற்றிபெற்று இருப்போம். என்று கூறி அமைச்சர் மஸ்தானுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
போலீஸார் கண்ணனின் ஆதர வாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததால் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தேர்தல் தள்ளி வைத்ததற்கான காரணம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் கூறியது, "இன்று (நேற்று) நடக்க இருந்த ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வில் குறித்த நேரத்தில் குறைவான அளவில் மட்டுமே உறுப்பினர்கள் வந்தனர். இதன் காரணமாகத் தான் தேதி குறிப்பிடாமல் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதற்கிடையே தயாளன் அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர் என்றும், கண்ணன் அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர் என் றும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago