காஞ்சி எம்எல்ஏ அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக - சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ : ஆக்கிரமிப்பாளர்களை பேசியதாக எம்எல்ஏ விளக்கம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அரசு அலுவலர்களை தரக்குறை வாக பேசியதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை எம்எல்ஏ எழிலரசன் மறுத்துள்ளார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸை சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் உட்பட பலர் உடன் சென்றனர்.

அப்போது அங்குள்ள வாகன நிறுத்தும் இடங்களையும் ஆய்வு செய்தனர். அந்த வாகன நிறுத்தும் இடங்களில் சிலர் லாரியை நிறுத்தி ஆக்கிரமித்திருந்தனர். இதைப் பார்த்த காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அங்குள்ள சிலரை தரக்குறைவாக பேசுவதுடன், கோயில் செயல் அலுவலரிடம் இதையெல்லாம் நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள்? என்றும் கேள்வி எழுப்பும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அமைச்சர், ஆட்சியர் முன்னிலையிலேயே காஞ்சிபுரம் எம்எல்ஏ அதிகாரிகளை தரக் குறைவாக பேசியதாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனிடம் கேட்டபோது, "நான் கோயில் இடத்தைஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர் களைதான் பேசினேன். அதிகாரி களை பேசவில்லை" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்