சாலைப் பணியாளர் சங்க : திண்டுக்கல் கோட்ட மாநாடு :

By செய்திப்பிரிவு

சாலைப் பணியாளர்கள் ஊர்வலத்தை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடந்த கூட்டத்துக்கு கோட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சேகர் வரவேற்றார். கோட்ட இணைச் செயலாளர் சீனிவாசன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் முருகேசன் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். கோட்டச் செயலாளர் சிவக்குமார் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஊதியத்தில் பத்து சதவீதம் ஆபத்துப்படி வழங்கவேண்டும். பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது, 10 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகி வருகிறது. விரைந்து பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்