மதுரையில் களைகட்டி வரும் தீபாவளி வியாபாரம் : மாசி வீதிகளில் சித்திரை திருவிழா போல் திரளும் மக்கள்

By செய்திப்பிரிவு

தீபாவளி நெருங்குவதால் புத் தாடைகள், அத்தியாவசியப் பொருட்களை வாங்க மதுரை மாசி வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்திரைத் திருவிழா போல திரண்டு வருகின்றனர்.

மதுரையில் மாசி வீதிகள், விளக்குத்தூண், வெங்கலக்கடைத் தெரு உள்ளிட்ட மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில்தான் ஒட்டுமொத்த வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.

நகைக் கடைகள், ஜவுளி நிறுவனங்கள், ஹார்டுவேர் கடைகள், வீட்டு உபயோகப் பொருள் விற்கும் கடைகள், எலக்ட்ரிக் சாதனப் பொருட்கள் விற்கும் கடைகள், சிறு, குறு வியாபாரிகள், ஷாப்பிங் கடைகள் உள்ளிட்டவை மாசி வீதிகளில் செயல்படுகின்றன.

அதனால், மதுரைக்கு சுற்றுலா வரும் பயணிகளும், உள்ளூர் மக்களும் மாசி வீதிகளில்தான் புத்தாடைகள், பொருட்களை வாங்குவர்.

விழாக் காலங்களில் இந்த வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மக்கள் நடந்துசெல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

தீபாவளிக்கு 2 வாரமே உள்ளதால் மதுரை மட்டுமல்லாது, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புத்தாடைகள், பொருட்களை வாங்க மாசி வீதிகளில் திரண்டு வருகின்றனர். கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த வர்த்தக நிறுவனங்கள் தற்போது மக்கள் வருகையால் வியாபாரம் சூடு பிடித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமும் கட்டுக்கடங்காத கூட்டம் மாசி வீதிகளில் திரள்வதால் போலீஸார் சுழற்சி முறையில் ரோந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதோடு வழிப்பறி, திருட்டுகளில் ஈடுபடுவோரை கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்