ஊராட்சி செயலருக்கு ஊதியம் வழங்குவதை ஊராட்சித் தலைவர்கள் இழுத்தடிப்பதை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மானாமதுரை ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் அதன் தலைவர்கள் ஊராட்சி செயலர்களுக்கு மாத ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் ஊதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டுமென ஊராட்சி செயலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் நடவடிக்கை இல்லாததால் இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பணியாளர்கள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க நிர்வாகி ஆண்டிச் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அரசாணை எண்.205 மூலம் ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஏற்கெனவே வழங்கிய ஊதி யத்தைவிட ரூ.850 குறைவாக வழங்கப்படுகிறது. எனவே அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊராட்சி செயலர்களை ஒன்றியத்துக்குள் இடமாறுதல் செய்ய வேண்டும். ஒன்றியங்களில் 18 ஆண்டுகளாக தற்காலிக பணி யாளர்களாக பணிபுரியும் வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப் பாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago