மாயமான ராணுவ வீரரை கண்டுபிடிக்கக்கோரி - தேனி ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு :

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒன்றியம் பண்ணைபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள்(60). இவ ரது மனைவி ராஜம்மாள்(55). இவர்களுக்கு நாகராஜ், ராமசாமி ஆகிய 2 மகன்களும் ஈஸ்வரி என்ற மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் ராணுவ வீரர்கள்.

இதில் இளைய மகன் ராமசாமி பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு 1996-ல் ராணுவத்தில் சேர்ந்தார். 2005-ம் ஆண்டு விடுமுறைக்கு வந்துவிட்டு மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்குபணிக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்குச் சென்ற ராமசாமி நீண்டகாலமாக பணிக்குத் திரும்பவில்லை என்று 2006-ம் ஆண்டில் தேவாரம் காவல் நிலையத்துக்கு ராணுவ முகாமில் இருந்து தகவல் வந்துள்ளது. இதனையடுத்து பெருமாள் தனது மகனைக் கண்டுபிடித்து தருமாறு தேவாரம் காவல்நிலையம், மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுத் தார்.

மேலும் மதுரை நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர்.

இருப்பினும் ராமசாமி குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்நிலையில், பெருமாள் அவரது மனைவி ராஜம்மாள், மகள் ஈஸ்வரி ஆகியோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் முரளிதரனிடம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், ஜம்மு-காஷ்மீரில் பணியில் இருக்கும் போது மகன் காணாமல் போய் உள்ளார்.

15 ஆண்டுகள் ஆகியும் எவ்வித தகவலும் இல்லை. உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று கூட தெரியவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்