வேப்பனப்பள்ளி வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்றவரை போலீஸார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்ஐ. சிவசாமி ஆகியோர் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மாரச்சந்திரம் அருகே சென்ற காரை நிறுத்தினர். அதில், 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது.
விசாரணையில் காரை ஓட்டி வந்தவர், மாரச்சந்திரம் பகுதியைச் சேர்ந்த மவுலா (25) என்பதும், வேப்பனப்பள்ளி, மாரச்சந்திரம் பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது. இதையடுத்து மவுலாவை கைது செய்த போலீஸார், ரேஷன் அரிசியுடன் காரையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago