குற்றாலத்தைப்போல் குத்தரப்பாஞ்சான் அருவியில் மேம்பாடு : தமிழக சட்டப்பேரவை தலைவர் உறுதி

குற்றாலத்தைப்போல் குத்தரப் பாஞ்சான் அருவியையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.

பணகுடியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கன்னிமார் தோப்பில் குத்தரப்பாஞ்சான் அருவியை சுற்றுலாத்துறை சார்பில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக நேற்று அப்பாவு ஆய்வு செய்தார்.

பணகுடியில் மனோ கல்லூரி அருகில் 4.25 ஏக்கர் பரப்பளவில் வீடில்லாத வறியவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டு வதற்கான இடங்கள் மற்றும் 2 ஏக்கரில் நடை பயிற்சி பாதையுடன் கூடிய பூங்கா அமைப்பதற்கான இடங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பணகுடியில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குத்தரப்பாஞ்சான் அருவியில் குளிக்க செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் சுற்றுலா தலமாக அதை பயன்படுத்திவந்த நிலையில் வனத்துறையினர் அதற்கு தீடீரென தடை விதித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளுடன் நேரில் பேசி அனுமதி அளிக்கும்படி விளக்கினேன்.

அரசு விதிகளுக்கு உட்பட்டு குத்தரப்பாஞ்சான் அருவிப் பகுதி மற்றும் கன்னிமார் தோப்பு பகுதியை குற்றாலத்தைப்போல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும். இங்கு குடும்பங் களுடன் மகிழ்ச்சியாக வந்து செல்லவும், உடைமாற்றும் அறை, நடைபாதைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.

பணகுடி பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பம் செய்து உள்ள அனைவருக்கும் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். வீடில்லா மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் அதிகாரிகளை நேரடியாக சந்தித்து மனுக்களை கொடுக்கலாம்.

யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, மாவட்ட பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் ஞான சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இலவச மின்சாரம் பெறுவதற்கு ஆணை

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் 42 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு பெறுவதற் கான ஆணைகளையும் , 14 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் இலவச மின் இணைப்புக்கான ஆணைகளையும், கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்