மூன்றாவது மாஸ்டர் பிளான்; சென்னையில் திட்டமிட்ட வளர்ச்சி சாத்தியமா? - துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்

By டி.செல்வகுமார்

1975-ல் சென்னையில் முதல் மாஸ்டர் பிளான் கொண்டு வரப்பட்டது. 13 ஆண்டுகள் தாமதமாக, 2-வது மாஸ்டர் பிளான் 2008-ல்வந்தது. மேலும், மாஸ்டர் பிளான்களில் இல்லாத, கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் சென்னையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இரண்டாவது மாஸ்டர் பிளானை செயல்படுத்த ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்ட 6குழுக்கள், ஆண்டுக்கு ஒருமுறைகூடி விவாதிக்க வேண்டும். ஆனால், 2008 முதல் 2021 வரைஒருமுறை கூடி விவாதிக்கவில்லை. வெறுமனே நிலத்தை வகைப்படுத்துவதற்காக மட்டுமே மாஸ்டர் பிளான் உள்ளது.

இந்நிலையில், சென்னையின் 3-வது மாஸ்டர் பிளான் தயாரிப்பதில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) திறன் குறித்து மதிப்பீடு செய்து, அதுகுறித்த அறிக்கை உலக வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதேசயம், சென்னைக்கான 3-வது மாஸ்டர் பிளான் மூலம் திட்டமிட்ட வளர்ச்சி எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தொழில்முறை நகரமைப்பு சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த் கூறியதாவது: சென்னையில் இரண்டு மாஸ்டர் பிளான்களை சரிவர செயல்படுத்தியிருந்தால். குடிநீர், சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாநகரம் முதன்மை பெற்றிருக்கும்.

அடிப்படைத் தேவைகள்

உதாரணத்துக்கு, ஒருவருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீரில் டிடிஎஸ் அளவு (நீரில் உள்ள தாதுப் பொருட்களின் அடர்த்தி) 150-500 வரை இருக்க வேண்டும். ஆனால், தற்போது வழங்கப்படும் குடிநீர் தரமாக இல்லாததுடன், போதிய அளவு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். சாலையின் தரத்தை சொல்ல வேண்டியதே இல்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

வீட்டு வசதி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், குடிநீர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட25 அத்தியாவசியத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், திட்டமிட்ட வளர்ச்சி சாத்தியாகும். அதற்கேற்ப மாஸ்டர் பிளான் இருப்பது அவசியம்.

சென்னை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல இப்போது இல்லை. வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே,சென்னைக்கான 3-வது மாஸ்டர் பிளானை, அடுத்த 20 ஆண்டுகளில் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைத்து, மக்கள் கருத்தை அறிந்து தயாரிக்க வேண்டும்.

மாஸ்டர் பிளானை 3 கட்டங்களாக செயல்படுத்த வேண்டும். மூன்று முதல் 5 ஆண்டுகளுக்கான முதலாவது செயல் திட்டம், 5 முதல் 10 ஆண்டுகளுக்கான இரண்டாவது செயல் திட்டம், 20 ஆண்டுகள் வரையிலான 3-வது செயல் திட்டம் ஆகியவற்றை மக்களின் அவசர, அவசியத்தைக் கருத்தில்கொண்டு, குறித்த காலத்துக்குள் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்