தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அனல்மின் நிலையத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கு, மின் உற்பத்தி பகுதி, கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த ஆட்சியில் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரி பதிவேட்டுக்கும், இருப்புக்கும் 71 ஆயிரம் டன் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோல், தமிழகத்தின் பிற அனல்மின் நிலையங்களிலும் நிலக்கரி இருப்புக்கும், பதிவேட்டுக்கும் உள்ள வித்தியாசத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் உள்ள 3.63 லட்சம் மின்மாற்றிகளில் நவீன கருவி பொருத்தும் பணி நடைபெறுகிறது.மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது என்றார்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர், மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago