விருதுநகரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் : போலீஸாருடன் தள்ளுமுள்ளு

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறையில் விவசாயிகள் இறந்தது தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து விருதுநகரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த வனமுறை தொடர்பாக மத்திய இணை அமைச்சர், உத்தரபிரதேச முதல்வர் ஆகியோர் பதவி விலகக்கோரி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் விருதுநகரில் போராட்டம் நடந்தது. பழைய பஸ் நிலையம் அருகே நடந்த போராட்டத்தில் இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலர் லிங்கம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ராமசாமி, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள், தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரிக்க முயன்றவர்களை போலீஸார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

இதே கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் ஐக்கிய முன்னணி சங்கம் சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார். அமைப்பாளர்கள் பாலுபாரதி, நிக்கோலஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்