விருதுநகரில் பாரம்பரிய மகர் நோன்பு திருவிழா : பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது

By செய்திப்பிரிவு

விருதுநகரில் ஆண்டுதோறும் விமர்சையாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய மகர் நோன்புத் திருவிழா எளிமையாக நடைபெற்றது.

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று விஜயதசமி நாளில் துர்க்கை அசுரனை வதம் செய்வதைக் கொண்டாடும் வகையில் மகர் நோன்புத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இளைஞர்களின் வீரத்தை நிரூபிக்கும் வகையில் வீர விளையாட்டுகள், பெண் பார்க்கும் படலம் ஆகியவற் றுடன் பாரம்பரியமாக நடத்தப்படும். இத்திருவிழா அனைத்து சமுதாயத்தினராலும் கொண்டாடப் படுவது குறிப்பிடத்தக்கது. மகர் நோன்புத் திருவிழா நேற்று பக்தர்கள் கூட்டமின்றி எளிமையாக நடந்தது. சொக்கநாதர் கோயிலில் நடைபெற்ற இவ்விழாவில் மழை பெய்ய வேண்டியும், விவசாயம், தொழில்கள் சிறக்கவும், ஊர் நன்மைக்காகவும் அம்புவிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவையொட்டி சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்