விருதுநகர் மாவட்டம், காரியா பட்டி அருகே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லி யல் எச்சங்கள் ஏராளமாக காணப் படுகின்றன.
காரியாபட்டி அருகே உள்ள கிழவனேரியில் அதிகமான முது மக்கள் தாழிகள் சிதறிக் கிடப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பார்த்திபக்கண்ணன் தகவல் அளித்தார். அதன்பேரில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரா.தாமரைக்கண்ணன், பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் அருப்புக்கோட்டை-தர், மதுரை - அருண் சந்திரன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதுபற்றி அவர்கள் கூறிய தாவது: கிழவனேரியின் மேற்குப் பகுதியில் பெரு ஊருணி என்ற பெரிய நீர்நிலை உள்ளது. அதன் அருகே ஒரு சிறு ஓடை செல்கிறது. அந்த ஓடையை அடுத்து மிகப் பெரிய காட்டுப் பகுதியில் மூதாதையரின் வரலாற்றை நினைவுகூரும் தொல்லியல் எச்சங்கள் ஏராளமாக பரவிக் கிடக்கின்றன. அப்பகுதியில் 2 கி.மீ. முதல் 3 கி.மீ. சுற்றளவுக்கு எங்கு பார்த்தாலும் முதுமக்கள் தாழியின் ஓடுகள் கிடக்கின்றன.மழையால் ஏற்பட்ட மண் அரிப் பால் முழுமையாக வெளியே தெரிந்த ஒரு முதுமக்கள் தாழியை ஆய்வு செய்தபோது மூதாதையர் ஒருவரின் பல்லும், முற்றிலும் சிதைந்த சில எலும்புகளும் கிடைத்தன.
மேலும், அத்தாழியின் உள்ளே 6 சிறு மண் முட்டிகள் இருந்தன. அதோடு. மண்ணால் ஆன உடைந்த தட்டின் சிறு பகுதிகள் கிடைத்தன. இறந்தவர்கள் என்றாவது ஒருநாள் உயிர் பிழைக்கலாம் என்ற நம்பிக்கையில், தாழியின் உள்ளே உடலோடு வைக்கப்பட்ட சிறு மண்பாண்டங்களில் உணவும், நீரும், நீர் அருந்த சிறுகுடுவையும், சிறு தட்டும் வைத்துள்ளனர். இந்த தாழியின் வாய்ப்பகுதி 2 அரை இன்ச் தடிமனில் உள்ளது. ஓடுகளின் மேற்புறத்தில் அழகிய வேலைப்பாடுகள் காணப்படுகின் றன.
இந்த தாழிகள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு கற்காலத்தைச் சேர்ந் ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு விரிவான ஆய்வுகளை செய்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago