ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற் பத்தி மையங்களை நாளை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
கரோனா பரவல் இரண்டாம் அலையின்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது செயற்கை சுவாசத்துக்கான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் திரவ நிலை ஆக்ஸிஜன் உருளை மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
அதனையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 ஆயிரம் கிலோ லிட்டர் அளவுள்ள திரவநிலை ஆக்ஸிஜன் உருளை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக் கும் வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பரமக்குடி அரசு தாலுகா மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களையும் நாளை (அக்டோபர் 7) காலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
ராமநாதபுரத்தில் நடக்கும் நிகழ்ச்சி யில் அமைச்சர், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப் பாளர் மலர்வண்ணன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago