பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் மோதி நான்கு விவசாயிகள் இறந்தனர். பின்னர் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டதைக் கண் டித்து காங்கிரஸார் மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர். அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த், மாநகர காங்கிரஸ் தலைவர் மணி கண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப் பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். இதில் திருவாடானை எம்எல்ஏ கரு மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், நகர் தலை வர் கோபி உட்பட பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தேனி

தேனி ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை மாநகர், புறநகர் மார்க்சிஸ்ட் சார்பில் திருப்பரங்குன் றத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜூ தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ரா.விஜயராஜன் தொடங்கி வைத்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். இதில், மாநகர், புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மதுரை தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் வீ.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வார்டு தலைவர்கள், மகிளா காங்கிரஸ், ஐஎன்டியூசி, சேவா தள நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்